டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்த பாபர் அசாம்! பாகிஸ்தான் அபார வெற்றி
பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான பாபர் அசாம் இந்த ஆண்டில் மூன்று வித போட்டிகளிலும் டக் அவுட் ஆன முதல் வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
நிகோலஸ் பூரான் தலையிலான மேற்கிந்திய தீவு அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இன்று கராச்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் எடுத்தது.
Excellent start for @windiescricket
— Pakistan Cricket (@TheRealPCB) December 13, 2021
Akeal Hosein gets a MASSIVE wicket in the first over.#PAKvWI pic.twitter.com/QKFlkYOUDd
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மொகமது ரிஷ்வான் 78 ஓட்டங்கள் குவித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு துவக்க வீரரும், அணியின் கேப்டனுமான பாபர் அசாம் முதல் ஓவரின் 4-வது பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதன் மூலம் இந்த 2021-ஆம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் டக் அவுட் ஆன முதல் வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இந்த ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலே டக் அவுட் ஆகியும், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரண்டாவது பந்திலே டக் அவுட் ஆகியிருந்தார்.
பாபர் அசாம் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 809 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தார்.
இதைத் தொடர்ந்து 201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்கள் எடுத்து, 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்று முன்னிலையுடன் உள்ளது. இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை(14-ஆம் திகதி), இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.