கோலி... ஹெய்டன் சாதனையை சமன் செய்த பாபர் அசாம்!
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக அரைசதம் விளாசிதன் மூலம் கோலி, மேத்யூ ஹெய்டன் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சமன் செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஷார்ஜாவில் நடந்த ஸ்காடலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 66 ரன்கள் அடித்தார்.
இது 2021 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாபர அசாம் அடித்த 4வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஒரே டி20 உலகக் கோப்பை தொடரில் 4 அரைசதம் அடித்த விராட் கோலி மற்றும் மேத்யூ ஹெய்டனின் டி20 உலகக் கோப்பை சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார்.
2007 நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன் 4 அரைசதங்களை அடித்து முதல் வீரராக இச்சாதனையை படைத்தார்.
ஹெய்டனை தொடர்ந்து 2014 டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 4 அரைசதங்களை அடித்து இரண்டாவது நபராக சாதனை படைத்தார்.
தற்போது, 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் 4 அரைசதங்களை அடித்து ஹெய்டன், கோலி சாதனையை சமன் செய்துள்ளார்.