சொந்த மண்ணில் விளையாடும் உலகின் no.1 வீரர்: சாம்பியன்ஸ் டிராஃபி குறித்து கூறிய விடயம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அஸாம், தனது சொந்த மண்ணில் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் விளையாட உள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராஃபி 2025
சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் இன்று கராச்சியில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி களம் காண்கிறது.
இந்த நிலையில், சொந்த மண்ணில் விளையாடுவது குறித்து தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீரரான பாபர் அஸாம் தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
தவறுகளைப் பற்றி விவாதித்தோம்
அவர் கூறுகையில், "ஒரு வீரராக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். மேலும் அனைத்து ரசிகர்களும் உற்சாகமாக உள்ளனர். 2017யில் சாம்பியன்ஸ் டிராஃபி நடைபெற்றதில் இருந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
எங்களிடம் புதிய வீரர்கள் வருகிறார்கள். அந்த வென்ற அணியில் மூன்று அல்லது நான்கு வீரர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் நம்பிக்கை, தைரியம் மற்றும் செயல்திறன் ஒரே மாதிரியானவை.
கடந்த காலத்தில் செய்த தவறுகளைப் பற்றி விவாதித்தோம். அவற்றை சரிசெய்துள்ளோம். எந்தவொரு அணியிலும் ஒரு மூத்த வீரராக இருக்கும்போது பொறுப்பு இருக்கும். அணி உங்களை நம்பி, உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும்போது, நான் அதை நேர்மறையான வழியில் எடுத்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |