உலகக்கோப்பையில் ஆப்கானிடம் அதிர்ச்சி தோல்வி..ஆனாலும் எதிரணி வீரருக்கு பேட் பரிசளித்த பாபர் அசாம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது தங்கள் அணியை காயப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
Twitter (@ACBofficials)
இது ஆப்கானிஸ்தான் அணிக்கு வரலாற்று வெற்றி ஆகும். அதாவது முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
மேலும், புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 65 ஓட்டங்களும், இப்ராஹிம் ஜட்ரான் 87 ஓட்டங்களும், ரஹ்மத் ஷா 77 ஓட்டங்களும் விளாசினார்.
இதனைத் தொடர்ந்து, ஆப்கானின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்த ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு தனது பேட்டினை பாபர் அசாம் பரிசாக அளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
A gift from Pakistani Captain Babar Azam to Rahmanullah Gurbaz after the historic win for Afghanistan.
— Cricket In Blood (@CricketInBlood_) October 23, 2023
The spirit of cricket alive and well ?
Video Credit ? @ICC#PAKvAFG #PAKvsAFG #AFGvPAK #AFGvsPAK #BabarAzam? #Gurbaz pic.twitter.com/lBfNu3HLFQ
முன்னதாகஅதிர்ச்சி தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், 'இந்த தோல்வி எங்களை காயப்படுத்தியது. ஆனால் அதில் இருந்து கற்றுக்கொள்ள முயற்சிப்போம். விளையாட்டின் நேர்மறையான அம்சங்களையும் நாங்கள் பார்ப்போம். ஆனால் எங்களால் செய்ய முடியாததை சரி செய்வோம்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |