கோலியின் மிரட்டல் சாதனையை எட்டி பிடித்த பாகிஸ்தான் கேப்டன்!
பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் 50 சிக்ஸர் மற்றும் 311 பவுண்டரிகள் விளாசியுள்ளார்
ரோகித் சர்மா 3694 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ஓட்டங்கள் எடுத்து பாபர் அசாம் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. மொத்தம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளன.
கடைசி போட்டி லாகூரில் 2ஆம் திகதி நடக்க உள்ளது. முன்னதாக நேற்று நடந்த 6வது டி20 போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 59 பந்துகளில் 87 ஓட்டங்கள் விளாசினார்.
Twitter
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ஓட்டங்கள் எடுத்த கோலியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இருவரும் 81 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
மேலும் 3000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டும் 5வது வீரர் என்ற பெருமையையும் பாபர் அசாம் பெற்றுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்:
1. ரோகித் சர்மா
2. விராட் கோலி
3. மார்ட்டின் கப்தில்
4. பாபர் அசாம்
5. பவுல் ஸ்டிர்லிங்