யாரும் செய்யாத புதிய வரலாற்று சாதனை! மிரட்டிய பாகிஸ்தான் கேப்டன்
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி முல்தானில் நடந்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷாய் ஹோப் 127 ஓட்டங்களும், ப்ரூக்ஸ் 70 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி பாபர் அசாமின் அபார சதத்தினால் 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அசாம் 107 பந்துகளில் 103 ஓட்டங்கள் எடுத்தார்.
Photo Credit: Reuters
இதன்மூலம் புதிய உலகசாதனை ஒன்றை அவர் படைத்தார். அதாவது, அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அடித்த மூன்றாவது சதம் இதுவாகும்.
.@babarazam258 MAKES HISTORY! ?
— Pakistan Cricket (@TheRealPCB) June 8, 2022
? The No.1 batter becomes the ???? player to record three successive ODI centuries twice ???#PAKvWI | #KhelAbhiBaqiHai pic.twitter.com/nJxAixPE1i
இதற்கு முன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு சதங்கள் விளாசியிருந்தார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை, இருமுறை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.
Photo Credit: AP