புதிய வரலாற்று சாதனை படைத்தார் பாபர் அசாம்! தொடரும் பாகிஸ்தான் கேப்டனின் ரன் வேட்டை
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக பாகிஸ்தான் அரையிறுதிக்கு சென்றுள்ளது.
தொடர்ந்து 4 போட்டிகளிலும் அந்த அணி வென்று வியக்கவைத்துள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்த கேப்டன் பாபர் அசாம் நேற்று நடைபெற்ற நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு முக்கியமான சாதனையை ஒன்றிணையும் நிகழ்த்தியுள்ளார்.
அந்த சாதனை யாதெனில் ஐசிசி நடத்தும் டி20 உலக கோப்பை தொடரில் கேப்டனாக ஒரே தொடரில் மூன்று அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் படைத்துள்ளார்.
ஏற்கனவே இந்திய அணிக்கெதிராக 68 ரன்களும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 51 ரன்களும், தற்போது நமீபியாவுக்கு எதிராக 70 ரன்கள் என மூன்று அரை சதங்களை அவர் இந்த தொடரில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.