ஐபிஎல்-ஐ விட அவுஸ்திரேலியாவின் பிபிஎல் சிறந்தது..!பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கருத்து
இந்தியாவின் ஐபிஎல்-ஐ விட அவுஸ்திரேலியாவின் பிபிஎல் சிறந்தது என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கருத்து தெரிவித்துள்ளார்.
பிபிஎல் சிறந்தது
உலக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.
இதற்கு அனைத்து வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்-லில் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்துவதே முக்கிய காரணம்.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல்-ஐ விட அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிபிஎல் சிறந்த தொடர் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் கருத்து தெரிவித்துள்ளார்.
According to Babar Azam ?
— Cricket Pakistan (@cricketpakcompk) March 15, 2023
Big Bash League > IPL#PSL pic.twitter.com/RRpbH57wuE
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், அவுஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது, எனவே அங்குள்ள மாற்று சூழலில் நிறைய கற்றுக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.
பாபர் அசாமின் இந்த கருத்து ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஐபிஎல்
2023 ம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் மாதம் 31 திகதி தொடங்க உள்ளது.
இதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.