அந்த விடயம் துரதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது! உலகக்கோப்பையில் தோல்விக்கான காரணம் கூறிய பாபர் அசாம்
முதல் ஓவரிலேயே ஹேல்ஸின் விக்கெட்டை கைப்பற்றிய ஷஹீன் அஃப்ரிடி, தனது 3வது ஓவரை வீசும்போது காயமடைந்தார்
ஷஹீன் அஃப்ரிடியின் காயம் தங்களுக்கு துரதிர்ஷ்டமாக அமைந்துவிட்டதாக பாபர் அசாம் தெரிவித்தார்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தோல்விக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசினார்.
மெல்போர்னில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி மகுடம் சூடியது.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில், பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ஷஹீன் அஃப்ரிடி பாதியில் காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
போட்டி முடிந்ததும் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், 'இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க இங்கு வந்ததைப் போல நாங்கள் உணர்ந்தோம். மிக்க நன்றி. கடந்த நான்கு போட்டிகளில் அணி சென்ற விதம் நம்ப முடியாததாக இருந்தது.
ICC
எங்கள் வீரர்களிடம் இயல்பாகவும், சுதந்திரமாகவும் விளையாடுமாறு கூறினேன். நாங்கள் இந்தப் போட்டியில் 20 ஓட்டங்கள் குறைவாக எடுத்தோம்.ஆனாலும் கடைசி ஓவர் வரை போராடியது நம்ப முடியாத வகையில் இருந்தது.
எங்களது பந்துவீச்சு சிறந்த ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஷஹீனின் காயம் எங்களுக்கு வித்தியாசமான முடிவைக் கொடுத்தது. எனினும் அது விளையாட்டின் ஒரு பகுதி தான்' என தெரிவித்தார்.
t20worldcup