கேப்டன் பதவியில் இருந்து விலகிய பாபர் அசாம் : அடுத்த பாகிஸ்தான் கேப்டனை அறிவித்த கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் ராஜினாமா செய்துள்ளார்.
உலகக் கிண்ண போட்டியில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான்
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுக்கொள்ளாமல் போட்டியில் இருந்து வெளியேறியது.
அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றிருந்தனர்.
நேற்று நடைபெற்ற போட்டியல் இந்திய அணி வெற்றிப்பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி 9 லீக் போட்டிகளில் 4 மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தை பிடித்திருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் என்ற தகவல்கள் நேற்று வெளியாகியது.
அதையடுத்து அணியின் கேப்டனும் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
ராஜினாமா செய்த பாபர் அசாம்
பாபர் 2020 முதல் பாகிஸ்தான் கேப்டனாக இருந்து வந்தார். அவர் டி20 அணிக்கு பொறுப்பேற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கும் முன்வகித்தார்.
ஆனால் இந்தியாவில் நடந்து வரும் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியதால் 29 வயதான அவர் பதவி விலக வழிவகுத்துள்ளது.
— Babar Azam (@babarazam258) November 15, 2023
பாபர் தனது சமூக ஊடகத்தில் இது குறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.
மேலும் இந்த குறிப்பிடத்தக்க பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய கேப்டன்
இதையடுத்து பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
அதன்படி, டி20 போட்டிகளுக்கு சஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத்-ம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |