உலகின் நம்பர் 1 வீரராக அவர் வருவார் என கூறிய தினேஷ் கார்த்திக்: பாகிஸ்தான் வீரரின் பதில்
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தலைசிறந்த வீரராக வருவார் என தினேஷ் கார்த்திக் கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பதிலளித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள், டி20 போட்டிகளில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாபர் அசாம், டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் தான் பாபர் அசாம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தலைசிறந்த வீரராக வருவார் என இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
Photo Credit: IPL/BCCI
இதற்கு பதில் அளித்துள்ள பாபர் அசாம் கூறுகையில், 'அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் no.1 வீரராக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். அதற்காக கவனம் செலுத்தி கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக உருவெடுப்பது என்பது எளிதல்ல.
களத்தில் பிட்னஸ் உடன் இருப்பது மிகவும் அவசியம். சிறிய இடைவெளிகளில் அடுத்தடுத்து கிரிக்கெட் விளையாட வேண்டி வந்தால், நீங்கள் கூடுதல் உடல் தகுதியுடன் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.
Photo Credit: ICC
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எனது ஆட்டம் நன்றாக செல்கிறது. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாட விளையாட உள்ளது.
Photo Credit: AFP