பாபர் அசாமில் சரவெடி ஆட்டம்: டெஸர்ட் வைப்பர்ஸ் அதிரடி வெற்றி
Babar azam 86 runs in 51 balls: ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் வெற்றி பெற்றது.
இன்டர்நெஷனல் லீக் டி20 போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தியது.
பால் வால்டர்
டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்டர்நெஷனல் லீக் டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது.
முதலில் ஆடிய ஷார்ஜா வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 166 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பால் வால்டர் 43 பந்துகளில் 75 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்) விளாசினார். குஸைமா தன்வீர் மற்றும் ஷதாப் கான் தலா 3 விக்கெட்டுகளும், டாம் கர்ரன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பாபர் அஸாம் அதிரடி
பின்னர் ஆடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் பாபர் அஸாம் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். ஜோர் கிளார்க் 27 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசி வெளியேற, பாபர் அஸாம் அரைசதம் அடித்தார்.
51பந்துகளை எதிர்கொண்ட பாபர் அஸாம் (Babar Azam) 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாபர் அஸாம் ஆட்டநாயன் விருது பெற்றார்.
