இதுவும் கடந்து போகும், நம்பிக்கையுடன் இருங்கள் கோலி! பாகிஸ்தான் கேப்டனை கொண்டாடும் ரசிகர்கள்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கழட்டிவிடப்பட்ட கோலிக்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான் கேப்டனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் விராட் கோலியின் பெயர் இடம்பெறவில்லை. அவரது தொடர்ச்சியான மோசமான ஃபார்ம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 3 பவுண்டரிகளை கோலி விளாசினார். பெரிய இன்னிங்சை அவர் ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், உடனே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதன் காரணமாக கோலிக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்தார்.
This too shall pass. Stay strong. #ViratKohli pic.twitter.com/ozr7BFFgXt
— Babar Azam (@babarazam258) July 14, 2022
அதில் இதுவும் கடந்து போகும். நம்பிக்கையுடன் இருங்கள் என குறிப்பிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
இதனை கவனித்த கோலியின் ரசிகர்கள் பாபர் அசாமை சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி, பாபர் அசாம் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
PC: bcci.tv