அதிரடி சதம் விளாசி இஸ்லாமாத் அணியை துவம்சம் செய்த பாபர் அசாம்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஸல்மி அணி அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
பாபர் அசாம் சதம்
லாகூரின் கடாஃபி மைதானத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் 13வது போட்டியில், பாபர் அசாமின் பெஷாவர் ஸல்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதின.
அதிரடியாக முதலில் துடுப்பாடிய பெஷாவர் அணி, முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 77 ஓட்டங்கள் குவித்தது. சைம் அயூப் 38 (21) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அக்ஹ சல்மான் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
அடுத்து களமிறங்கிய முகமது ஹரிஸ் (2), ஹசீபுல்லா கான் (0) இருவரையும் ஷதாப் கான் வெளியேற்றினார். ஆனால் மறுமுனையில் கேப்டன் பாபர் அசாம் பவுண்டரிகளை விரட்டி அதிரடி சதம் விளாசினார்.
? ???? ???? ?? ?
— PakistanSuperLeague (@thePSLt20) February 26, 2024
Simply the best, ? Babar Azam brings up his second HBL PSL ? #HBLPSL9 | #KhulKeKhel | #PZvIU pic.twitter.com/GOu45jOOiS
இதன்மூலம் பெஷாவர் ஸல்மி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் குவித்தது. பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 111 ஓட்டங்கள் எடுத்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
அஸாம் கான் ருத்ர தாண்டவம்
பின்னர் துடுப்பாடிய இஸ்லாமாபாத் அணியில் ஜோர்டான் காக்ஸ் 13 ஓட்டங்களிலும், ஷதாப் கான் 6 ஓட்டங்களிலும், அக்ஹ சல்மான் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
எனினும், காலின் மன்றோ மற்றும் அஸாம் கான் கூட்டணி பெஷாவர் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்த அஸாம் கான் 30 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரிலேயே காலின் மன்றோவும் 71 (53) ஓட்டங்களில் ஆரிஃப் யக்வூப் பந்துவீச்சில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் இஸ்லாமாபாத் அணியின் வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஆனால், இஸ்லாமாபாத் யுனைடெட் அணியால் 10 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெஷாவர் அணி வெற்றி பெற்றது. ஆரிஃப் யக்வூப் 5 விக்கெட்டுகளும், சைம் அயூப், லுக் வுட், நவீன் உல் ஹக் மற்றும் சல்மான் இர்ஷாத் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |