டி20 உலகக்கோப்பைக்கு இவர் வேண்டும்! அடம் பிடிக்கும் பாகிஸ்தான் கேப்டன்: மறுத்து வரும் தேர்வு குழு?
பாகிஸ்தான் அணிக்கான டி20 உலகக்கோப்பை அணியில், சோயிப் மாலிக் வேண்டும் என்று பாபர் அசாம் விரும்புவதாகவும், ஆனால் அதை அணி தேர்வு குழுவினர் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 7-வது உலகக்கோப்பை டி20 தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து சர்வதேச அணிகளும், தரமான அணியை உலககோப்பைக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக, கடந்த சில மாதங்களாக வீரர்களின் தேர்வை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த உலகக்கோப்பை டி20 தொடருக்கான அணியை நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் அறிவித்துவிட்டதால், அடுத்தடுத்து விரைவில் அனைத்து அணிகளும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான வேலைபாடுகளில் பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆன பாபர் அசாம், இந்த உலகக்கோப்பை டி20 தொடருக்கு, சீனியர் வீரரான சோயிப் மாலிக வேண்டும் என்று கேட்கிறார்.
ஏனெனில் பாகிஸ்தான் அணியில் மிடில் ஆர்டர் அந்தளவிற்கு உறுதியாக இல்லை. சோயிப் மாலிக் வந்தால், அந்த இடம் இன்னும் கொஞ்சம் உறுதியாகும்.
குறிப்பாக மாலிக் சமீபத்தில் நடந்து முடிந்த Pakistan Super League 2021 மற்றும் Kashmir Premier League தொடர்களில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்ட்ரைக் ரேட் 150-க்கும் மேல் வைத்துள்ளார். அதுவே பாபர் அசாம் அவரை அணிக்கு கேட்க காரணம்.
ஆனால் அணி தேர்வாளர்களில் ஒருவரான முன்னாள் வீரர் Mohammad Wasim இதுக்கு உடன்படவில்லை என்று அங்கிருக்கும் தகவல்கள் கூறுகின்றன.
ஏனெனில் சோயிப்மாலிக்கிற்கு தற்போது 39 வயதாகிறது, அவர் டி20 ஒரு சர்வதேச அணிகளுடன் விளையாடும் போது, செட் ஆவாரா? என்பது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், பாகிஸ்தான் அணியில் இப்போது டி20 உலகக்கோப்பை அணிக்கான வீரர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.