கோலியை எச்சரிக்கும் பாகிஸ்தான் கேப்டன்! இது எங்க கோட்டை என சவால்
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், டி20 கோப்பையில் விளையாடவுள்ள இந்தியா மற்றும் பிற அணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
ஐசிசி நடத்தும் 7-வது டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் இங்கு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளதால், அனைத்து வெளிநாட்டு வீரர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமுடன் உள்ளனர்.
ஏனெனில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் மைதானத்தின் தன்மையை நன்கு புரிந்து கொள்ள இது உணரும் என்று முன்னணி வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆன, பாபர் அசாம் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்தியா மற்றும் பிற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் டி 20 உலகக் கோப்பை, எங்களுக்கு உள்நாட்டு தொடர் போன்றது. இங்கு நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருகிறோம்.
சொல்லப்போனால் இது எங்களுடைய ஹோம் கிரவுண்ட் மாதிரி, நாங்கள் எங்கள் திறமைகளை எல்லாம் அதிகம் வளர்த்துக் கொண்டது,
இங்கு தான். இதன் காரணமாக எங்கள் அணி வீரர்கள் இந்த உலகக்கோப்பை தொடரை மிகவும் ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் இந்த தொடர் மூலம், நாங்கள் எங்கள் திறமையை வெளிப்படுத்தவும், எங்கள் மேன்மையை மீண்டும் நிலைநாட்டவும் ஒரு வாய்ப்பாக கருதுறோம்.
எங்களுக்கு மிகவும் பொருத்தமான சூழ்நிலைகளில் விளையாடவுள்ளோம் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 12-ல் குரூப் 2-வில் உள்ளது. இதில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.