இந்தியா-பாக் போட்டிக்கு முன் கோலியுடன் பேசியது என்ன? வெளிப்படுத்த மறுத்த பாபர் அசாம்
டி20 உலகக் கோப்பையின் போது கோலியுடன் நடந்த உரையாடல் விவரங்களை வெளிப்படுத்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மறுத்து விட்டார்.
சமீபத்தில் நடந்த முடிந்த டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 24ம் திகதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது பாகிஸ்தான் அணி.
இப்போட்டியில் டாஸ் போடுவதற்கு முன் அப்போது இந்திய டி20 அணி கேப்டனாக இருந்த விராட் கோலியும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் உரையாடியது கமெராவில் சிக்கியது.
இந்நிலைியல், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பாபர் அசாமிடம், டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போடடிக்கு முன் கோலியிடம் உரையாடிய விவரம் குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அசாம், அனைவருக்கும் முன்னிலையில் கோலியுடன் நடந்த உரையாடல் குறித்த விவரங்களை வெளிப்படுத்த மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.