வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு சொந்த ஊரில் லட்சங்களில் வருமானம் ஈட்டும் நபர்! புகைப்படங்கள்
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவர் பஹ்ரைன், போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் என பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நிறுவனங்களில் தொழிலாளராக 15 ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்னர் ஒரு கட்டத்தில் சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்தார்.
அவர் கையில் எடுத்தது எலுமிச்சை விவசாயம்! இதன் மூலம் லட்சங்களில் பாபு வருமானம் ஈட்டி வருகிறார். பாபு கூறுகையில், முதல் கட்டமாக, எனது மூதாதையர் வீட்டிலிருந்து 14 மரக்கன்றுகளைச் சேகரித்து எனது 7 சென்ட் நிலத்தில் நட்டேன்.
வெறும் நான்கு ஆண்டுகளில், நான் சுமார் 1,000 கிலோகிராம் எலுமிச்சை அறுவடை செய்து ஒரு கிலோவுக்கு 100ரூபாய் என விற்றேன்.
ஒரு மரத்திலிருந்து கிட்டத்தட்ட 80-100 கிலோகிராம் எலுமிச்சம் பழங்கள் எனக்குக் கிடைக்கிறது. தற்போது எனக்கு கிட்டத்தட்ட 250 எலுமிச்சை மரங்கள் உள்ளன.
கடின உழைப்பால் மட்டுமே நல்ல பலன்களைப் பெற முடியும். முதல் நாள் தொடங்கி, நான் என் தாவரங்களுக்கு நல்ல அக்கறையையும் அன்பையும் கொடுத்தேன், அதனால் அவை அதிக பலனைத் தருகின்றன என கூறியுள்ளார்.