பச்சிளம் குழந்தை உட்பட மூன்று பிள்ளைகளைக் கத்தியால் குத்திய தாய் கைது: இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
இங்கிலாந்திலுள்ள வீடு ஒன்றில் அலறல் சத்தம் கேட்பதாக பொலிசாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிசார் அங்கு விரைந்தனர்.
அதிர்ச்சியளிக்கும் காட்சி
இங்கிலாந்திலுள்ள Huddersfield என்னும் இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு விரைந்த பொலிசார், அங்கு பிறந்து மூன்று மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றும், இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்றும், நான்கு வயது பெண் குழந்தை ஒன்றும் இரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டு கிடப்பதைக் கண்டுள்ளனர்.
அதே வீட்டில், 34 வயதுள்ள பெண் ஒருவரும் காயங்களுடன் இருந்துள்ளார்.
உடனடியாக நால்வரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர் பொலிசார்.
image - Credit: PA
குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாக சந்தேகம்
அந்த 34 வயதுப் பெண், அந்த மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய முயன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த இரண்டு வயது ஆண் குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
அந்தக் குடும்பத்தினர் எந்த நாட்டவர்கள் என்பது முதலான எந்த விவரங்களும் வெளியாகாத நிலையில், அந்தக் குழந்தைகள் அந்தப் பெண்ணின் குழந்தைகள் என்றும், அந்தப் பெண்ணின் கணவர் டெக்சி ஓட்டுபவர் என்றும் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் கூறியுள்ளார்.
குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்ட விடயம் அப்பகுதியில் கடுமையான அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.