முட்டைக்குள் இருக்கும்போதே பேசும் உயிரினம்: எது தெரியுமா?
உலகில் எந்த மிருகத்தால் முட்டைக்குள் இருக்கும் பொழுது பாடவோ, பேசவோ முடியும் என்று பலருக்கும் தெரியாத ஒன்று.
பொதுவாக விலங்குகளில் சில முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன, சில குட்டிகளை ஈனுகின்றன.
குட்டி விலங்குகள் முட்டைக்குள் இருக்கும்போதே பேசத் தொடங்குகின்றன என்பதை சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவரான கேப்ரியல் ஜார்ஜீவிச் கோஹன் கண்டுபிடித்தார்.
அந்தவகையில், முட்டைக்குள் இருக்கும்போதே பேசும் அந்த உயிரினம் ஆமை தான்.
அத்துடன், ஆமைக் குட்டிகள் முட்டைக்குள் ஒரு வகையான பாடலைப் பாடுகின்றன என அவர் கூறுகிறார்.
இந்த விலங்குகள் தங்கள் சுவாசத்தின் மூலம் தொடர்பு கொள்கின்றன.
கடல் ஆமை குஞ்சுகள் ஒரே நேரத்தில் முட்டைக்குள் இருந்து வெளிவருவதை குறிக்கும் வகையில், அவை முட்டைகளிலிருந்து பாடுவதாக தெரிவித்துள்ளார்.
குஞ்சு பொரிக்கும் போது வேட்டையாடுபவர்களிடமிருந்து அவற்றைப் பாதுகாக்க இது வழியாகும்.
இதைதவிர, தாய் ஆமையுடன் தொடர்பு கொள்ளவும் இது ஒரு வழியாக இருக்கிறது. அந்த ஒலியை வெறும் காதுகளால் கேட்க முடியாது என்றாலும், உணரமுடியும் என்று சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |