விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் தெரியுமா?
விமானப் பயணத்தின் போது நடுவானில் குழந்தை பிறப்பது அரிதான நிகழ்வு.
இப்படிப் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாது.
அமெரிக்கா, கனடா போன்ற சில நாடுகள் தங்களது வான் எல்லைக்குள் குழந்தை பிறந்தால் குடியுரிமை வழங்குகின்றன.
ஆனால் பெரும்பாலான நாடுகள் பெற்றோரின் குடியுரிமை அடிப்படையிலேயே குழந்தைக்கு குடியுரிமை வழங்குகின்றன.
மேலும், விமானம் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டதோ அந்த நாட்டின் சட்டமும் சில சமயங்களில் பொருந்தும்.
1961 சர்வதேச ஒப்பந்தத்தின் படி, கடலுக்கு மேலே சர்வதேச வான்பரப்பில் குழந்தை பிறந்தால் விமானத்தின் சொந்த நாட்டில் பிறந்ததாகக் கருதப்படும்.
நடுவானில் பிறந்த குழந்தைக்கு Thai Airways, AirAsia போன்ற சில நிறுவனங்கள் மட்டும் அரிதாக சலுகை வழங்குகின்றன.
குழந்தை பிறப்பை விமானக் கேப்டன் தகவலை அருகிலுள்ள வான் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்த பின் விமானம் தரையிறங்கும் நாட்டின் அதிகாரிகளிடம் பிறப்பு விவரங்கள் சமர்ப்பிக்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |