பிரித்தானியாவில் சாலை விபத்தில் 7 வயது குழந்தை உயிரிழப்பு: பொலிஸார் விசாரணை
பிரித்தானியாவின் லிங்கன்ஷயரில் உள்ள A1 சாலையில் நிகழ்ந்த பயங்கரமான கார் விபத்தில் 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
கிரந்தம்(Grantham) அருகே கடந்த வியாழக்கிழமை இரவு 10.50 மணிக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தின் போது மஞ்சள் நிற ஹோண்டா ஜாஸ்(Honda Jazz) கார் சாலையை விட்டு விலகி, மரத்தில் மோதி மீண்டும் சாலையில் திரும்பி விழுந்தது.
குழந்தை உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த 7 மாத குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போதிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
காரில் பயணித்த ஒரு பெண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற இருவர் லேசான காயங்களுடன் தப்பித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
விபத்துக்கு பனிப்படலம் காரணமாக இருந்ததா என்பது குறித்து லிங்கன்ஷயர் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நேரத்தில் அந்த பகுதியில் பயணித்தவர்கள், குறிப்பாக டாஷ் கேம் காட்சிகளை கொண்டிருப்பவர்கள் முன்வந்து தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |