கழிவறை கோப்பைக்குள் அழுத்தி பிறந்த குழந்தை கொடூரமாக கொலை
பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையை கழிவறை கோப்பைக்குள் அழுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கொலை
தமிழக மாவட்டமான விழுப்புரம், விக்கிரவாண்டிக்கு அருகில் உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் வார்டுக்கு பின்னால் கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையில் உள்ள கோப்பைக்குள் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை அழுத்தி கொலை செய்துள்ளனர்.
இந்த குழந்தைக்கு தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது.
பின்னர், கழிவறைக்கு சென்ற நபர் ஒருவர் இதனை பார்த்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமான நபர்களை கண்டறிய பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |