பிரித்தானியாவில் மருத்துவமனையில் பலியான பச்சிளம் குழந்தை: பகீர் குற்றச்சாட்டின் பேரில் செவிலியர் கைது
பிரித்தானியாவில் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் குழந்தை ஒன்று சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தது.
அதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் கைது செய்யப்பட்டதால் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை, பர்மிங்காமிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. அன்று மாலையே அந்த மருத்துவமனையில் பணியாற்றிய 27 வயதான பெண் செவிலியர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட, மருத்துவமனையில் பரபரப்பு தொற்றிகொண்டது.
காரணம், அந்த செவிலியர் அந்த பச்சிளம் குழந்தைக்கு விஷம் கொடுத்ததாக வெளியான தகவல்தான்!
தடயவியல் நிபுணர்கள் குழந்தையின் மரணம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அந்த செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையை இழந்த பெற்றோருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.