பிரித்தானியாவில் 2வது மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள்
பிரித்தானியாவில் இரண்டாவது மாடியின் ஜன்னலில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜன்னல் வழியாக விழுந்த குழந்தை
பிரித்தானியாவின் பர்ன்லி(Burnley) பகுதியில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதிப்புக்கு உள்ளான ஆண் குழந்தைக்கு 1 வயது எனவும், இந்த விபத்து சம்பவத்தால் பலத்த காயமடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
GOOGLE
இதனால் குழந்தை உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குழந்தை எவ்வாறு இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே விழுந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் ஹிப் சாலையில்(Heap Street) உள்ள வீட்டிற்கு வெளியே ஏற்பட்ட இந்த சம்பவத்தில் குழந்தைக்கு உதவிய மக்களை சந்தித்து அவர்களிடம் இது குறித்து விவரங்களை சேகரிக்க உற்று நோக்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Royal Manchester Children's Hospital(GERALD ENGLAND/GEOGRAPH)
இத்தகைய இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திடம் தங்களது எண்ணங்கள் இருப்பதாக DI மார்க் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |