கனடாவில் காருக்குள் சுயநினைவின்றிக் கிடந்த குழந்தை: பொலிசார் தெரிவித்துள்ள துயரச் செய்தி
கனடாவின் ஒன்ராறியோவில், காரின் பின் இருக்கையில் குழந்தை ஒன்று சுயநினைவின்றிக் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிசார் தெரிவித்துள்ள துயரச் செய்தி
திங்கட்கிழமை மாலை 4.45 மணிக்கு கனடாவின் ஒன்ராறியோவில், காரின் பின் இருக்கையில் குழந்தை ஒன்று சுயநினைவின்றிக் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அவசர உதவிக்குழுவினருடன் பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

அவசர உதவிக்குழுவினர் குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவமனையில் அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றார்கள். குழந்தைக்கு என்ன நேர்ந்தது, அது தவறுதலாக காருக்குள் விடப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
அந்தக் குழந்தையின் தந்தையும் தாயும் மருத்துவமனையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், அவர்களைக் குறித்த எந்த விவரங்களையும் பொலிசார் வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |