பிரான்சில் பைக்குள் துண்டுதுண்டாக்கப்பட்ட நிலையில் கிடைத்த குழந்தை: இளம்பெண் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர்ப் பகுதி ஒன்றில் அமைந்துள்ள வீடு ஒன்றில், பை ஒன்றிற்குள் துண்டு துண்டாக்கப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் கைது
பாரீஸ் புறநகர்ப்பகுதி ஒன்றில் வாழும் ஒரு இளம்பெண், தன் தோழிகள் இருவரை தொலைபேசியில் அழைத்து, தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தக் குழந்தை இறந்தே பிறந்ததாகக் கூறிய அந்த பெண், அந்தக் குழந்தையை தான் துண்டு துண்டாக வெட்டப்போவதாகவும் கூறியுள்ளார்.
Credit: Newsflash
இந்த தகவல் கிடைத்ததும் பொலிசார் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு விரைந்துள்ளனர். அங்கு, பை ஒன்றிற்குள் குழந்தை ஒன்று துண்டு துண்டாக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளதைக் கண்ட பொலிசார், அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
மன நல மருத்துவமனையில் அனுமதி
அந்த 21 வயது இளம்பெண் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர் மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
Metro UK
அந்த இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவர் கர்ப்பமாக இருந்ததும், அவர் குழந்தையைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் விடயமும் அவரது பெற்றோருக்குத் தெரியுமா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |