பிரித்தானியாவில் வீட்டு நாய் கடித்ததில் பெண் குழந்தைக்கு நேர்ந்த கதி: சோகத்தில் வாடும் குடும்பம்!
பிரித்தானியாவில் வீட்டு நாய் கடித்ததில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு நாய் கடித்து உயிரிழந்த குழந்தை
பிரித்தானியாவின் மேற்கு மிட்லண்ட்ஸில் (West Midlands)ஞாயிற்றுக்கிழமை மதியம் இதயத்தை உருக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஷோர்ன் கிளிஃப் சாலையில்(Shorncliffe Road) உள்ள வீட்டில், குடும்பத்தின் செல்ல நாயால் கடிக்கப்பட்ட ஏழு மாத பெண் குழந்தை துயரகரமாக உயிரிழந்துள்ளது.
மாலை 3 மணிக்கு சற்று பிறகு அவசர கால சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தலையில் பலத்த காயங்கள் அடைந்த குழந்தைக்கு ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்துவிட்டது.
அப்புறப்படுத்தப்பட்ட செல்லப்பிராணி
சம்பந்தப்பட்ட நாய் அபாயகரமான இனத்தைச் சேர்ந்த நாய் அல்ல என்றாலும், அது வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மேற்கு மிட்லண்ட்ஸ் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த துயரமான சமயத்தில் குடும்பத்தினருக்கு அவர்களது ஆதரவு தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |