அவருக்கு பதிலளிப்பது சிறு பிள்ளைத்தனம்... பிரான்ஸ் நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே பொளீர்
அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் தம்மை சீண்டும் செயலுக்கு பதிலளிப்பது என்பது சிறு பிள்ளைத்தனம் என பிரான்ஸ் நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே காட்டமாக தெரிவித்துள்ளார்.
கைலியன் எம்பாப்பே
எமிலியானோ மார்டினெஸ் செயலுக்கு பதிலளித்து தமது நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்க விரும்பவில்லை எனவும் கைலியன் எம்பாப்பே சுட்டிக்காட்டியுள்ளார். கத்தார் உலகக் கோப்பை வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினெஸ் குட்டி பொம்மை ஒன்றை வைத்திருந்தார்.
@AP
அதில் பிரான்ஸ் நட்சத்திரம் எம்பாப்பேவின் முகம் பதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் எம்பாப்பேவின் சக பி.எஸ்.ஜி வீரரான மெஸ்ஸியும் எமிலியானோ மார்டினெஸ் பக்கத்தில் நின்றிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் விவாதமான நிலையில், அது குறித்து தாம் கவலைப்படவும் இல்லை என எம்பாப்பே தெரிவித்துள்ளார். அவர்கள் கொண்டாட்டம் என்பது எனது பிரச்சனை அல்ல.
முழுமையாக உழைக்க வேண்டும்
அப்படியான சிறு பிள்ளைத்தனத்திற்கு பதிலளிப்பது என்பது நேர விரயம் என குறிப்பிட்டதுடன், எது முதன்மையானது என்றால், அணிக்காக முழுமையாக உழைக்க வேண்டும் என்பதே என்றார் கைலியன் எம்பாப்பே.
@getty
மேலும், மெஸ்ஸி தங்கள் அணியுடன் இணைந்து மேலும் பல கோல்களை குவிக்க வேண்டும் எனவும், அணிக்கு வெற்றிகளை ஈட்டித்தர வேண்டும் எனவும் எம்பாப்பே தெரிவித்துள்ளார்.