எந்த உள்நோக்கமும் இல்லை.., வெளிநாட்டில் இருந்து கொண்டு இர்ஃபான் கடிதம்
இர்ஃபான் தனது மனைவியின் பிரசவத்தின் போது தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் வெளிநாட்டில் இருந்து கொண்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
இர்ஃபான் வருத்தம்
பிரபல யூடியூபர் இர்ஃபான், சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை துபாயில் ஸ்கேன் எடுத்து அறிவித்தார்.
பாலினத்தை அறிவிப்பது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய புகார்கள் வந்தது. ஆனால், அவர் மன்னிப்பு கூறியதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, தனது மனைவியின் பிரவசத்தில் அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "இச்சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம். இந்த விவகாரத்தில் மருத்துவ சட்ட விதிகளை இர்பான் மீறியுள்ளார். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும்" என்று கூறியிருந்தார்.
அதன்படி, சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், யூடியூபர் இர்ஃபான் தொப்புள் கொடி விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர், தற்போது வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடிதத்தின் மூலமாக தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில், "எந்த உள்நோக்கத்துடன் வீடியோ பதிவு செய்யவில்லை. மருத்துவ சட்ட விதிகளை மதிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |