பிரபல நிறுவனத்தின் பால் பவுடரில் நச்சு? வழக்குத் தொடர்ந்துள்ள எட்டு குடும்பங்கள்
பிரபல உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனம், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது நிறுவனத் தயாரிப்பான குழந்தைகளுக்கான பால் பவுடரை திரும்பப் பெறுவதாக அறிவித்த விடயம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்த விடயம் தொடர்பில் பிரான்சில் எட்டுக் குடும்பங்கள் நீதிமன்றம் சென்றுள்ளன.
பால் பவுடரில் நச்சுப்பொருள்
நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்புகளான SMA, BBA, மற்றும் NAN உட்பட பல பால் பாவுடர் தயாரிப்புகள், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன், ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் இத்தாலி உட்பட 60 நாடுகளில் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதாவது, செயற்கையாக தயாரிக்கப்படும் இந்த பால் பவுடர்கள் தாய்ப்பாலை ஒத்திருக்கவேண்டும் என்பதற்காக பால் பவுடரில் கலக்கப்படும் ARA என்னும் உட்பொருளில் செருலைட் என்னும் நச்சுப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அந்த தயாரிப்புகள் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
வழக்குத் தொடர்ந்துள்ள எட்டு குடும்பங்கள்
இந்நிலையில், பிரான்சிலுள்ள எட்டு குடும்பங்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பால் பவுடரைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பாலை அருந்தியதால் தங்கள் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
Foodwatch என்னும் நுகர்வோர் நல அமைப்புடன் இணைந்து அந்த எட்டு குடும்பங்களும், இந்த விடயம் தொடர்பில் சட்டப்படி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
சம்பந்தப்பட்ட நிறுவனமும் சரி, அரசும் சரி, பால் பவுடரில் பிரச்சினை என தகவல் வெளியானபின்பும், தாமதமாக நடவடிக்கை எடுத்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |