பிரித்தானிய வீடு ஒன்றில் பிரீஸருக்குள் இருந்த பச்சிளம்குழந்தை... பதறவைத்த ஒரு சம்பவம்
இங்கிலாந்தில், வேலைக்குச் சென்றிருந்த கணவனை பதற்றத்துடன் தொலைபேசியில் அழைத்த மனைவி கூறிய விடயத்தைக் கேட்டு உடனடியாக வீட்டுக்கு திரும்பிய கணவனுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
தெற்கு யார்க்ஷையரில் வாழும் Darnell Jackson (23), கடை ஒன்றில் வேலை செய்கிறார். நேற்று மதியம் அவரை தொலைபேசியில் அவசரமாக அழைத்த அவரது மனைவியான Carol Hirst(28), தான் பிரீஸருக்குள் ஒரு குழந்தை இருப்பதைப் பார்த்ததாகக் கூற, பதறிப்போய் உடனே வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.
தம்பதிக்கும் ஒரு சிறு குழந்தை இருக்கிறது.
ஆக, என்ன நடந்தது என்று தெரியாமல் பதறி வீட்டுக்கு வந்த Jacksonஇடம், பக்கத்து வீட்டு ப்ரீஸரில் தான் ஒரு குழந்தையைக் கண்டதாகக் கூறியிருக்கிறார் Carol.
அவர் கூறுவது உண்மைதானா எனப் பார்ப்பதற்காக Jackson அங்கு விரைய, அந்த வீட்டில் ஒரு பை கிடந்திருக்கிறது. அதை அப்போதுதான் யாரோ பிரீஸரிலிருந்து வெளியே எடுத்து போட்டிருக்கிறார்கள்.
அதை Jackson திறந்து பார்க்க, அந்தப் பைக்குள், தாயின் வயிற்றுக்குள் சுருண்டு படுத்திருப்பது போல் ஒரு குழந்தை உறைந்த நிலையில் இறந்து இருந்திருக்கிறது.
தங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்க, அதுவும் அப்போது ஞாபகம் வர, அதிர்ச்சியடைந்த Jacksonஆல் அதற்குப் பின் அந்த வீட்டுக்குள் நிற்க முடியாமல், வீட்டை விட்டு வெளியே வந்து பொலிசாருக்காக காத்து நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவரது மனைவியும், அந்த குழந்தையைக் கண்டதும் வீட்டுக்கு ஓடிச்சென்று தன் குழந்தையைத்தான் பார்த்திருக்கிறார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், சந்தேகத்தின் பேரில் 17 மற்றும் 45 வயதுடைய இரண்டு பெண்களை கைது செய்து காவலில் அடைத்துள்ளார்கள். விசாரணை தொடர்கிறது.