கனேடிய குடிமகன் இந்தியா வந்தபோது கொல்லப்பட்டதன் பின்னணி : குடும்பத்தார் தெரிவித்துள்ள தகவல்
பஞ்சாபிலுள்ள Gurdaspur என்ற இடத்தைச் சேர்ந்த பர்தீப் சிங் (24) என்பவர், 2016ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்று அங்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்று வாழ்ந்துவந்துள்ளார்.
இந்தியா வந்தபோது நேர்ந்த துயரம்
சமீபத்தில் இந்தியா வந்த அவர் Rupnagar என்ற இடத்தில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சென்றிருந்த நிலையில், அவருக்கும் நிரஞ்சன் சிங் என்பவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் கைகலப்பாக மாற, படுகாயமடைந்த பர்தீப் சிங் உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தார் தெரிவித்துள்ள தகவல்
இந்நிலையில், அவர் எதனால் கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவல் ஒன்றை அவரது குடும்பத்தினர் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.
Pained to see young Canadian Sikh killed at Anandpur Sahib in Hola Muhalla celebrations
— Manjinder Singh Sirsa (@mssirsa) March 7, 2023
Such incidents reflect the need to introspect within our community
On one side, we hv achievers like Mr Ajay Banga & on other, such incidents defame Sikhs & Punjabpic.twitter.com/HYSnbOOOMw
அதாவது, மக்கள் ஏராளமாக கூடியிருந்த இடத்தில் சில குண்டர்கள் கார் ஒன்றில் தரக்குறைவான பாடல்களை சத்தமாக ஒலிக்கச் செய்துகொண்டிருந்தார்களாம்.
அதை பர்தீப் சிங் தட்டிக்கேட்டதால்தான் அவர்கள் அவரைத் தாக்கினார்களாம். அந்த குண்டர்களால் தாக்கப்பட்ட அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக பர்தீப் சிங்கின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.