விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் பின்னடைவு: காங்கிரஸ் முன்னேறியது
விருதுநகர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
முன்னேறிய காங்கிரஸ்
மதியம் 12 மணி நிலவரப்படி விருதுநகர் தொகுதியில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளைக் கடந்து சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
இரண்டாவது இடத்தில் மாணிக்கம் தாகூர் ஒரு லட்சத்து 6 ஆயிரம் வாக்குகளுடனும், மூன்றாவது இடத்தில் ராதிகா சரத்குமாரும் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில சுற்றுகளாக மாணிக்கம் தாகூருக்கும், விஜய பிரபாகரனுக்கு இடையே சில நூறு வாக்குகளில் மாறி மாறி முன்னிலை வகித்தனர்.
தற்போதைய நிலவரப்படி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி,
மாணிக்கம் தாகூர் 208839 வாக்குகளும்
விஜய பிரபாகரன் 203002 வாக்குகளும்
ராதிகா 83845 வாக்குகளும்
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவுசிக் 40765 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதில் மாணிக்கம் தாகூர், விஜய பிரபாகரனை விட 5837 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |