பின்னோக்கி இயக்கப்பட்ட பயணிகள் ரயில்.., ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை
ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற பயணிகள் ரயில் பின்னோக்கி இயக்கப்பட்டதால் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் பின்னோக்கி இயக்கம்
தமிழக மாவட்டமான திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று காலையில் சென்ற பயணிகள் ரயிலானது ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.
அதாவது, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நிற்காமல் சென்றுள்ளது.
பின்னர், சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ரயில் முன்னோக்கி சென்ற நிலையில் நிற்காமல் சென்றதை ரயில் ஓட்டுநர்கள் அறிந்துள்ளனர். இதையடுத்து அவர்கள், ரயிலை பின்னோக்கி இயக்கியுள்ளனர்.
அப்போது, தாதன்குளம் ரயில் நிலையத்தில் இறங்கவேண்டிய பயணிகள் இறங்கினர். அங்கிருந்த ஏற வேண்டிய பயணிகள், ரயிலில் ஏறிய பின்பு ரயில் புறப்பட்டது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், ரயில் ஓட்டுநர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |