சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் உணவுப்பொருள் ஒன்றில் கிருமிகள்: ஆய்வு முடிவுகள்
சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் 5 சதவிகித சாலட்களில், பாக்டீரியா வகை கிருமிகள் இருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட உணவகங்கள்
மாகாண அதிகாரிகள், நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், உணவு விற்பனையகங்கள், உணவு தயாரிக்கும் இடங்களில் நடத்திய சோதனைகளில் 205 சாலட்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
அவற்றில் 5 சதவிகித காய்கறி மற்றும் பழ சாலட்களில் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவில் பாக்டீரியா வகை கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தரமான ஆய்வு
பொதுவாக, ஆங்காங்கே உள்ள உணவகங்களுக்குச் சென்று ஏதாவது ஒரு உணவு வகையை குத்துமதிப்பாக எடுத்துத்தான் சோதனை செய்வார்கள். இதை random முறை சோதனை என்பார்கள்.
ஆனால், சுவிட்சர்லாந்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட சோதனை அப்படிப்பட்டதல்ல. அது அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்ட தரமான ஒரு சோதனையாகும். அதாவது, melon என்று அழைக்கப்படும் கிர்ணிப்பழ வகையைச் சேர்ந்த பழங்களில் அமிலத்தன்மை குறைவாக இருக்கும். ஆகவே, அவற்றில் பாக்டீரியா வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அப்படிப்பட்ட உணவுப்பொருட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, ஆய்வு முடிவுகள் எதிர்பார்த்ததைவிட மோசமாக இருந்தன. அவற்றில், staphylococci மற்றும் listeria என்னும் இரண்டுவகை கிருமிகள் இருந்தன.
Photo by Jill Wellington on Pexels.com
அவற்றில், இந்த listeria, வயதானவர்கள் அல்லது குழந்தைகளை உயிரைக் கொல்லக்கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
அதைவிடக் கொடுமை, இந்த listeria கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட உணவகங்களுக்கு இந்த ஆய்வு முடிவுகள் குறித்து தகவலளிக்கப்பட்டு, எங்கிருந்து இந்த கிருமிகள் வந்தன என்பதைக் கண்டுபிடித்து பிரச்சினைகளைத் தீர்க்க தக்க நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.