காலையில் மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீர்கள்.. நாள்முழுவதும் அசௌகரியத்தை ஏற்படுத்துமாம்
அன்றாட நாட்களில் காலை உணவு என்பது மிகவும் அவசியமான ஒன்று.
அதனை ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்படி எடுத்துக்கொள்ளவேண்டும்.
அந்தவகையில் காலை வேளைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை மறந்தும் கூட சாப்பிட்டுவிடாதீர்கள். அது என்னென்ன என்று பார்க்கலாம்.
istock
பழச்சாறு
பழச்சாற்றில் நார்ச்சத்து இல்லை, எனவே காலையில் அதை முதலில் குடிப்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
இதனால், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கும்.
Pancakes மற்றும் waffles
Pancakes மற்றும் waffles-ஐ பெரும்பாலான மக்கள் இதனை காலை உணவாக சாப்பிட விரும்புகிறார்கள்.
அதிகாலையில் இவற்றைச் சாப்பிட்டால், நாள் முழுவதும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ண வேண்டும் என்ற ஆவல் உண்டாகும், இது உங்கள் ஆற்றலைக் குறைக்க அதிக வாய்ப்புள்ளது.
தேனீர்
காலையில் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சில சமயங்களில் அது இல்லாமல் அசௌகரியமாக உணர ஆரம்பிக்கிறார்கள்.
இதை காலையில் குடிப்பதால் உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும். இதனால் உடலில் அமிலத்தன்மை, வயிறு எரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம், மேலும் இது இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம்.
காபி
காலையில் காபி குடிப்பது கார்டிசோலின் அளவை அதிகரிக்கலாம், இது ஹார்மோன் சமநிலையை எதிர்மறையாக பாதிக்கும், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதை விட, காலை உணவுக்குப் பிறகு குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சுவையூட்டப்பட்ட தயிர்
சுவையூட்டப்பட்ட தயிர்களும் காலை உணவுக்கு ஆரோக்கியமற்ற தேர்வாகும், ஏனெனில் அவற்றில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
பல வகை தயிர்களில் கொழுப்பு அல்லது பிற ஊட்டச்சத்து கலவைகள் இல்லை, அவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமற்ற தேர்வாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |