PCOS எடையை எளிய முறையில் குறைக்கனுமா? இந்த டீயை தூங்கும்போது மறக்காமல் குடிங்க!!
பொதுவாக இன்றைய காலத்தில் பல பெண்கள் சந்திக்கும் ஒரு முக்கியபிரச்சினையாக பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) உள்ளது.
அதிலும் PCOSஆல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடல் பருமன் என்பது முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது.
அப்படி இதை குறைப்பது என்பதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் சில இயற்கை வழிகளை பின்பற்றினால் எளியமுறையில் இதனை குறைக்கலாம்.
அந்தவகையில் PCOS எடையை ஈஸியா குறைக்ககூடிய அற்புத டீ ஒன்றை இங்கே எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
- நெய் - 1 தேக்கரண்டி.
- மிளகுத்தூள் / முழு மிளகு - 6
செய்முறை
முதலில் மிக்ஸில் முழு மிளகை போட்டு, நன்றாக அரைத்து பவுடராகவும். ரெடிமேட் பொடியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனென்றால், ரெடிமேட் பொடி அதன் தயாரிப்பு காரணமாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
இப்போது, அடுப்பில் 1 கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும். நீர் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
ஒரு கிளாஸ் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் நெய், சிறிது மஞ்சள் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்த கருப்பு மிளகு தூளை சேர்க்கவும்.
அதில், கொதிக்கும் வெந்நீரை ஊற்றி நன்றாக கலக்கவும். கலக்க ஸ்டிக் பிளெண்டர் அல்லது ஸ்பூனை பயன்படுத்தவும். இதில், நுரை மற்றும் கிரீம் பதத்திற்கு வந்தவுடன் கலக்குவதை நிறுத்தவும்.
மஞ்சளின் சுவை அதிகமாக இருந்தால், அதில் ½ தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொள்ளவும்.
இதை உறங்குவதற்கு முன் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.