ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் ஒரு நல்ல செய்தியும்
ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்துவிட்டு பதிலுக்கு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டின் துவக்க நிலவரப்படி 40,000 ஆகும்.
2005ஆம் ஆண்டு விண்ணப்பித்த விண்ணப்பங்களில் சில கூட இன்னமும் பரிசீலிக்கப்படாமல் உள்ளன என்பதுதான் மோசமான செய்தி.
கெட்ட செய்தி
ஆக, 2024 ஜனவரியில், குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலனை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டதால், முன்னர் காகிதங்களில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் தேங்கிவிட்டன.
ஆகவே, காகிதங்களில் உள்ள அந்த விண்ணப்பங்களை முதலில் டிஜிட்டல் மயமாக்குவது அவசியமாகிவிட்டது.
அத்துடன், பழைய விண்ணப்பங்களுடன் கொடுக்கப்பட்ட வருவாய் சான்றிதழ் போன்ற சில ஆவணங்கள் காலாவதியாகிவிட்டன,
ஆகவே, குடியுரிமைக்கு அப்போது விண்ணப்பித்தவர்கள் மீண்டும் அவற்றை கொடுக்கவேண்டியுள்ளது.
நல்ல செய்தி
நல்ல செய்தி என்னவென்றால், தற்போது ஒன்லைனில் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பது எளிதாகி விட்டதால், சமீபத்தில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சீக்கிரமாக பரிசீலிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், டிஜிட்டல் முறையில் பரிசீலிப்பதால், முன்பைவிட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்படுகின்றன.
எனவே, 2024க்கு முன் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள், மீண்டும் ஒருமுறை ஒன்லைனில் விண்ணப்பித்தால், அவர்களுடைய விண்ணப்பங்கள் சீக்கிரமாக பரிசீலிக்கப்படலாம்.
இந்த விடயத்தை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், முன்னர் குடியுரிமைக்கு காகிதத்தில் விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்கள், மீண்டும் ஒருமுறை ஒன்லைனில் விண்ணப்பித்தால், அவர்களுடைய விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |