Google Pay பயனர்களுக்கு ஒரு கெட்ட செய்தி: இந்த சேவைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்
இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கட்டண சேவை தளங்களில் ஒன்றான கூகிள் பே, இனி குறிப்பிட்ட சேவைகளுக்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகிள் பே
இதுவரை கட்டணமில்லா சேவையை வழங்கி வந்துள்ள கூகிள் பே தற்போது எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான சேவைக் கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் GPay நிறுவனம் இது தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்பதுடன், உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை. ஓராண்டுக்கு முன்னர் அலைபேசிகளுக்கான கட்டணம் செலுத்த ரூ 3 சேவைக்கட்டணமாக GPay நிறுவனம் வசூலிக்க முடிவு செய்தது.
செலவுகளை ஈடுகட்ட
பொதுவாக ஒரு வாடிக்கையாளர் தனது மின்சார கட்டணத்தை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால், அவரிடம் இருந்து சேவைக் கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட சதவிகித வாடிக்கையாளர்கள் அந்த சேவையைகளை பயன்படுத்தியும் வருகின்றனர்.
தற்போது GPay நிறுவனம் கட்டணம் வசூலிக்க இருப்பது எப்போது தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், வங்கி அட்டை கட்டணங்களைச் செயலாக்குவதற்கான செலவுகளை ஈடுகட்ட இந்தக் கட்டணம் உதவுகிறது என்று Google Payயின் வலைத்தளம் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |