நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவி.., நீட் மதிப்பெண் குறைவால் சிலமணி நேரத்தில் விபரீத முடிவு
நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாத விரக்தியில் மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி விபரீத முடிவு
இந்திய மாநிலமான ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 18 வயது மாணவி யதி அகர்வால்.
இவர் கடந்த 25-ம் திகதி தனது பிறந்தநாளை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களிலேயே விபரீத முடிவு எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில், "என்னுடைய பெற்றோரின் எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் யதி அகர்வால் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |