அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணிடம் மருத்துவர் செய்த மோசமான செயல்
இந்தியாவில் அறுவை சிகிச்சைக்காக சென்ற ஒரு பெண்ணுக்கு, பிறகுதான் தன் உடலில் நடந்த தவறு குறித்த ஒரு உண்மை தெரியவந்துள்ளது.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக சென்ற பெண்
இந்தியாவின் பீஹாரைச் சேர்ந்த சுனிதா தேவி (38) என்ற பெண், கர்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றுள்ளார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய சுனிதா தேவியின் உடல் நிலை மோசமடையவே, அவசரமாக அவரை மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
அப்போது சுனிதா தேவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறிய விடயம் அவரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆம், அவரது உடலில் இரண்டு சிறுநீரகங்களையும் காணவில்லை.
அதாவது, சுனிதா தேவிக்கு கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், அவரது இரண்டு சிறுநீரகங்ளையும் திருடி, யாருக்கோ விற்றிருக்கிறார்.
Image: hindustannewshub
மருத்துவரின் சிறுநீரகங்களை பறிக்க கோரிக்கை
தனது சிறுநீரகங்கள் இரண்டையும் இழந்த சுனிதா தேவிக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொலிசார் அந்த மருத்துவரை தேடி வரும் நிலையில், அவர் ஒரு போலி மருத்துவராக இருக்கலாம் என்னும் சந்தேகமும் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், பொலிசார் அந்த மருத்துவரைக் கண்டுபிடித்தால், அவரது சிறுநீரகங்களைப் பறித்து தனக்கு பொருத்தவேண்டும் என சுனிதா தேவி கேட்டுக்கொண்டுள்ளார். அதுதான் தனது சிறுநீரகங்களைத் திருடியதற்கு தக்க தண்டனையாக இருக்கும் என்கிறார் அவர்.
Image: hindustannewshub