உடல் குளிர்ச்சிக்கு சுவையான பாதாம் பிசின் பாயாசம்.., எப்படி செய்வது?
பாதாம் பிசின் செரிமான ஆரோக்கியம், மூட்டு ஆரோக்கியம் என பல நன்மைகளை வழங்குகிறது. மேலும், இயற்கையான குளிரூட்டியாக செயல்படுகிறது.
வெளியிலுக்கு இந்த பாதாம் பிசினில் பாயாசம் செய்து சாப்பிட்டால் உடலிற்கு குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.
அந்தவகையில், சுவையான பாதாம் பிசின் பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாதாம் பிசின்- 6 துண்டுகள்
- பால்- ½ லிட்டர்
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 10
- உலர் திராட்சை- 10
- பாதாம்- 4
- ஏலக்காய்- 3
- வெல்லம்- 1½ கப்
- சேமியா- 1 கப்
செய்முறை
முதலில் பாதாம் பிசினை 8 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டி வைத்து ஆறவைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ந்ததும் அதில் சேமியா சேர்த்து நன்றாக வேக விடவும்.
பின்னர் ஏலக்காய் தட்டி சேர்த்து கலந்ததும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதற்கிடையில் ஒரு வாணலில் நெய் சேர்த்து காய்ந்ததும் அதில் நறுக்கிய முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.
இப்போது கொதிக்கின்ற பாலில் ஊறிய பாதாம் பிசின் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இறுதியாக இதில் வறுத்த முந்திரி கலவையை சேர்த்து கலந்தால் சுவையான பாதாம் பிசின் பால் பாயசம் ரெடி.
இதை நீங்கள் பிரிட்ஜில் வைத்து குளிர்வித்து குடித்தாலும் சுவையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |