என்னை தப்பாக நினைக்காதீர்கள்; மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - நடிகர் படவா கோபி
நாய்கள் விவாத நிகழ்ச்சியில் தான் பேசியது முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை என்று நடிகர் படவா கோபி தெரிவித்துள்ளார்.
தெரு நாய்கள்
நீயா? நானா? விவாத நிகழ்ச்சியில் "தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் vs தெரு நாய்களுக்கும் நகரத்தில் உரிமை உள்ளது" என்ற தலைப்பு குறித்து கலந்துரையாடல் நடந்தது.
https://t.co/FVGYOFMmpn pic.twitter.com/N9gubx0EEO
— Black cat (@Cat__offi) September 1, 2025

ஒரு காலத்தில் ரூ 2க்கு பேனா விற்றவர்.,இன்று மாதம் 24 லட்சம் ஊதியம்: மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள்
இதில் நடிகர் படவா கோபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார். ஆனால், தெரு நாய்கள் குறித்து அவர் பேசிய விடயங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து, தற்போது படவா கோபி தான் பேசியது முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
அன்பான வேண்டுகோள்
அவர், "எல்லாரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட வீடியோ. நாய் பிரியராக வந்து உங்கள் கருத்தை மட்டும் கூறுங்கள் என்று என்னை அழைத்தார்கள். ஆனால் அங்கே என்னை சரியாக பேசவிடவில்லை. என்னுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால் நிகழ்ச்சி முழுத்தொகுப்பையும் வெளியிட வேண்டும்.
மக்கள் துடிப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். எனக்கு எதிராகவும், நாயை நேசிப்பவர்களுக்கு எதிராகவும் மோசமாக விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. நான் நிகழ்ச்சிக்கு வர முதல் காரணம் நாய்கள் மீது வைத்திருக்கும் அன்பும், பற்றும்தான். நான் பேசியதில் ஒரு விடயத்தை மட்டும் அவர்கள் ஒளிபரப்பி இருக்கிறார்கள்.
ஒரு சினிமா போலத்தான் நீங்கள் பார்த்த எபிக்ஸோட். TRPக்காக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. மக்களிடையே இதன்மூலம் வன்முறையை தூண்டுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. நான் கடைசியாகத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்; அதற்கு முன் அங்கு என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது.
நான் பேசிய நிறைய விடயங்கள் ஒளிபரப்படவில்லை. பொதுமக்கள் யாரும் தயவுசெய்து என்னை தப்பாக நினைக்காதீர்கள். என்னுடைய பேசினால் பாதிக்கப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள் உங்களுக்கு அது தப்பாக தோன்றினால் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்.
மனிதர்கள் மீதான அன்பினாலும், நாய்கள் மீதான அன்பினாலும் ஒரு தீர்வு கிடைக்கும் என்றுதான் நான் அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். ஆனால் அங்கு நடந்தது வேறு.
நீங்கள் அனைவரும் இதனை புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இப்படிக்கு உங்கள் அன்பை என்றும் நாடும் படவா கோபி" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |