இனி ஈஸியாக விமான நிலையத்தில் Luggageயை கண்டுபிடிக்கலாம்! புதிய ட்ராக்கிங் அறிமுகம்
டெல்லி விமான நிலையத்தில் Luggage எந்த பக்கேஜ் பெல்ட்டில் வரும் என்பதை அறிய புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Bagg Trax எனும் சேவை ஒரு ஸ்மார்ட் டேக் ஆக செயல்படும். இதனை Check-in Luggage உடன் இணைத்து ஆக்டிவேட் செய்த பின்னர், குறிப்பிட்ட அந்த Luggage பயனருக்கு பெல்ட் விவரங்கள், Luggage வரக்கூடிய விவரங்கள் குறித்த குறுந்தகவல் மூலமாக நமக்கு Notify செய்யப்படும்.
Express Photo
இதற்காக நீங்கள் முதலில் விமான நிலையத்தில் இருந்து Bagg Traxஐ வாங்க வேண்டும். பின் அதனை ஆக்டிவேட் செய்து, உங்களது Luggageயில் இணைத்துக் கொண்டால் போதும்.
Tagஐ ஆக்டிவேட் செய்வதற்கான வழிமுறைகள்
- Bag Tagயில் உள்ள தனித்துவமான QR கோடை ஸ்கேன் செய்யவும் அல்லது Bag.Hoi.in என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் போன் எண்ணை Enter செய்து, அதில் பெறப்பட்ட OTP மற்றும் பிற அடிப்படை தகவல்களை குறிப்பிடவும்.
- உங்களது பெயர், E-mail, உங்களது Bag Tagகிற்கு ஒரு Nickname கொடுக்க வேண்டும்.
- இப்போது உங்களின் Tag ஆக்டிவேட் ஆகிவிடும். உங்கள் போன் எண்ணில் இது குறித்த SMSஐ பெறுவீர்கள். வேலை முடிந்தது.
- இனி ஆக்டிவேட் ஆன உங்கள் Tagஐ Luggageயில் இணைப்பதன் மூலமாக, டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பிறகு உங்கள் Luggage குறித்த தேவையான விவரங்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இதில் இருக்கக்கூடிய ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், இந்த சேவை தற்போது டெல்லி விமான நிலையத்தில் உள்ள உள்ளூர் விமானங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அத்துடன் நீங்கள் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து இறங்கியதும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |