8000 பேரை பிளாக் செய்த பாக்யலட்சுமி சீரியல் நடிகை! எதற்காக தெரியுமா? அவரே கொடுத்த விளக்கம்
பிரபல சீரியல் நடிகையான நேஹா மேனன், இன்ஸ்டாகிராமில் எட்டாயிரம் பேரை பிளாக் செய்ததாக கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேஹா மேனன் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இதன் மூலம் மிகவும் பிரபலமான இவர், சமூகவலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், இவர் சற்று குண்டாக இருப்பதால், இவரின் புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள் சிலர் இவரின் உடல் அமைப்பை கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இது குறித்து அவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய பிறகுதான் உருவ கேலி என்கிற விஷயம் எனக்குத் தெரிய வந்தது.
ஒவ்வொரு கமென்ட்டை பார்க்கும்போதும் ஆரம்பத்தில் மிகவும் வேதனை அடைந்தேன். அம்மாவிடம் தான் என் வேதனைகளைக் கொட்டுவேன்.
எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என் அம்மா தான். நம்மைப் பற்றி கமெண்ட் செய்பவர்களுக்கு நாம் எதனால் எடை போட்டோம், அதனால் என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம் என்பதெல்லாம் தெரியாது.
ஏதாவது நெகட்டிவ் கமெண்டுகளை பார்த்தால், அவர்களுடைய கணக்கை பிளாக் செய்துவிடுவேன். அதுபோல கிட்டத்தட்ட 8000 கணக்குகளை பிளாக் செய்திருக்கிறேன்.
மெசேஜுகளை பார்த்து விட்டு அத்தனையையும் அழித்துவிடுவேன். இப்படி செய்தால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அந்த அளவிற்கு மனஅழுத்தத்திற்கு சென்றேன். இதிலிருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆனது என கூறியுள்ளார்.