வெறும் 30 நிமிடத்தில் ரூ.71,000 சம்பாதிக்கலாம்: எப்படி தெரியுமா?
நீங்கள் உணவு பிரியரா? சாப்பாடு என்றால் கொள்ளை பிரியமா? உங்களுக்கு தான் இந்த பதிவு.
உலகின் பிரம்மாண்டமான பாகுபலி சமோசாவை ருசி பார்த்தால் 71 ஆயிரம் ரூபாய்(இந்திய மதிப்பில்) பரிசாக வெல்லலாம்.
ஆனால் இதற்கு நீங்கள் உத்தரபிரதேசத்தின் மீரட்டில் உள்ள கவுஷல் சுவீட்ஸ் கடைக்கு தான் செல்ல வேண்டும்.
இங்கு தான் தயாராகிறது பாகுபலி சமோசா, எடை மட்டுமே 12 கிலோவாம்.
மூன்று தலைமுறைகளாக இனிப்பு கடை நடத்தி வருகின்றனர் சுபம் கவுஷலின் குடும்பத்தார்.
வியாபாரத்தை பெருக்குவதற்காக வித்தியாசமாக எதையாவது செய்ய நினைத்துள்ளார் சுபம் கவுஷல்.
இவர்கள் கடை சமோசாவுக்கு பிரபலம் என்பதால் அதை வைத்தே தொழிலை முன்னேற்ற முடிவெடுத்திருக்கிறார்.
இதன்படி முதலில் 4 கிலோவில் சமோசாவை தயாரித்துள்ளார், இதற்கு வரவேற்பு கிடைக்க 8 கிலோவில் தயாரித்துள்ளார்.
ஆனால் தற்போது 12 கிலோவில் பாகுபலி சமோசாவை தயாரித்துள்ளார், இதன் விலை மட்டும் 1500 ரூபாயாம்.
இதுமட்டுமா பாகுபலி சமோசாவை அரைமணிநேரத்தில் சாப்பிட்டு முடித்தால் 71 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்குவாராம்.
இதன் உள்ளே இருக்கும் மசாலா மட்டும் 7 கிலோ எடையாம், உருளைக்கிழங்கு, பட்டாணி, பன்னீர், உலர் பழங்களால் தயாரிக்கப்படுகிறது.
ஒரே ஒரு சமோசாவை தயாரிப்பதற்கு மட்டும் 6 மணிநேரம் பிடிக்கிறதாம், எண்ணெயில் பொரித்து எடுப்பதற்கு 1 1/2 மணிநேரம் ஆகிறதாம்.
இந்த சமோசா டிரெண்டாகி விட, பலரும் பிறந்தநாளுக்கு சமோசாவை ஆர்டர் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
இதுவரை 50 பாகுலி சமோசாக்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து கூட ஆர்டர்கள் குவிவதாகவும் மகிழ்கிறார் சுபம் கவுஷல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |