பிணைத்தொகை உத்தரவுடன் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன்
ஐதராபாத்தில் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பெண் உயிரிழந்த விவகாரம்
நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா 2' திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண், ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 13ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்த அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் பொலிஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஜாமீன்
அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் தரப்பில் ஜாமீன் மனு கோரப்பட்டது. ஆனால், பொலிஸார் அதனை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நாம்பள்ளி நீதிமன்றம் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் அளித்துள்ளது. அத்துடன் ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |