சாம் கரணை தோளில் தூக்கிக்கொண்டு உடற்பயிற்சி! வைரலாகும் இங்கிலாந்து வீரரின் வீடியோ
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பேர்ஸ்டோவ் சக அணி வீரர் சாம் கரணை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இங்கிலாந்து அணி இழந்தது. ஆனால், இந்த தொடர்களுக்கு முன்பாக நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகளை இங்கிலாந்து புரட்டி எடுத்தது.
குறிப்பாக ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியில் மிரட்டினார். இந்திய அணிக்கு எதிராக ஜானி பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 38 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். எனினும் அவர் தற்போது மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ஜானி பேர்ஸ்டோவ் சக அணி வீரரான சாம் கரணை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்கிறார்.
Jonny Bairstow is built different ??♂️
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 26, 2022
? via Reece Topley pic.twitter.com/85w2GutZpc
பின்னர் வேகமாக அவரை தூக்கிக்கொண்டே வேகமாக நடக்கிறார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் பல விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர் ஒருவர் இந்திய வீரர் சஹாலை இதேபோன்று ரோகித் சர்மா தூக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மற்றோரு ரசிகரோ இங்கிலாந்தின் பிராக் லெஸ்னர் தான் ஜானி பேர்ஸ்டோவ் என wwe மல்யுத்த வீரரை ஒப்பிட்டுள்ளார்.