ஒரே ஒரு கேட்சை கோட்டை விட்டதால் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறிய இங்கிலாந்து அணி! வைரல் வீடியோ
நியூசிலாந்துக்கு எதிரான அரையுறுதி போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜானி பெஸ்ட்ரோ கோட்டை விட்ட ஒரு கேட்ச்சால் அந்த அணி தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
நேற்று நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சேசிங் செய்தது.
அப்போது 17வது ஓவரின் முக்கிய தருணத்தில் ஜிம்மி நீஷம் அடித்த பந்து பவுண்டரி கோட்டுக்கு அருகே சென்றது. அதை பிடிக்க இங்கிலாந்து வீரர் ஜானி பெஸ்ட்ரோ முயன்றார்.
அப்போது பந்தை பிடித்தபடி பவுண்டரி கோட்டின் மீது கால் வைத்த அவர் பந்தை லாவகமாக தட்டி விட அதை லியம் லிவிங்ஸ்டோன் பிடித்தார்.
இதையடுத்து அவுட் என இங்கிலாந்து அணியினர் கொண்டாடினர். ஆனால் ரிப்ளேவில் பந்தை ஜானி, லியமிடம் வீசுவதற்கு முன்னரே அவர் கால் பவுண்டரி கோட்டில் பட்டது தெரிந்தது, இதையடுத்து அது சிக்சராக அறிவிக்கப்பட்டது.
பின்னர் நீஷம் சிறப்பாக விளையாடி 27 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
அந்த ஒரு கேட்சை சரியாக ஜானி பிடித்திருந்தால் போட்டியின் முடிவே கூட மாறியிருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.